Load Image
Advertisement

சாலைகள் சரியில்லை முதல்வர் ஸ்டாலின் வேதனை

North East Monsoon: Chief Minister Stalins pain is that the roads are not good    சாலைகள் சரியில்லை  முதல்வர் ஸ்டாலின் வேதனை
ADVERTISEMENT
சென்னை:''சாலைகள் போதிய பராமரிப்பு இல்லாமல், பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்; இந்நிலை மாற்றப்பட வேண்டும். இந்த விஷயத்தில், அமைச்சர்கள், அரசு செயலர்கள் மற்றும் தலைவர்கள் தீவிர கவனம் செலுத்த வேண்டும்,'' என, முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

வட கிழக்கு பருவ மழை முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம், நேற்று தலைமைச் செயலகத்தில் நடந்தது.

இதில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

வட கிழக்கு பருவ மழை காலத்தில், புயல், வெள்ளம் காரணமாக பாதிக்கப்படும் மக்களை, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க, பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள், நிவாரண மையங்கள் கண்டறியப்பட்டு, தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, துார் வாருவதோடு கரைகளை வலுப்படுத்த வேண்டும். மின் கசிவால் ஏற்படும் விபத்துகளை தடுக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பேரிடர் காலங்களில், செய்யக்கூடியவை, செய்யக் கூடாதவை குறித்து, மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

மாவட்ட கலெக்டர்கள், கன மழை, புயல், வெள்ளம் காரணமாக பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளை, பல்வேறு மண்டல குழுக்கள் அமைத்து, தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

சென்னை புறநகர் உட்பட பல்வேறு பகுதிகளில், சாலைகள் நிலை மிகவும் மோசமாக உள்ளதாக, எனக்கு தொடர்ந்து புகார்கள் வருகின்றன. அதேபோல, பல்வேறு மாவட்டங்களிலும், சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாவதோடு, சிறு விபத்துக்கள் ஏற்படும் செய்திகள் தொடர்ந்து வருகின்றன; இது ஏற்புடையதல்ல.

மழை நீர் வடிகால் பணிகள், குடிநீர் வாரியப் பணிகள், மெட்ரோ ரயில் பணிகள், மின் வாரியப் பணிகள் என பல்வேறு பணிகள் காரணமாக மட்டுமல்லாமல், பழைய சாலைகள் போதிய பராமரிப்பு இல்லாமல், பொது மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்; இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.

நம் மாநில சாலைகள் தரமானதாக, மக்கள் பாராட்டப்படும் வகையில் அமைக்கப்பட வேண்டும். இதை வெறும் அறிவுரையாக மட்டும் நான் கூறவில்லை.

அமைச்சர்களும், அரசு செயலர்களும், தலைவர்களும், இதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.

நானும் இதை கள ஆய்வு செய்தும், பணி முன்னேற்றம் கூட்டங்கள் நடத்தியும், உறுதி செய்ய உள்ளேன். இந்த வாரம், சென்னையில் ஆய்வு நடத்த உள்ளேன்.

இனி, சுற்றுப்பயணம் செல்லும் மாவட்டங்களிலும், இது தொடர்பாக நேரடியாக ஆய்வு செய்ய முடிவு செய்திருக்கிறேன். சாலைப் பணிகள் மேற்கொள்ளும் துறைகள் அனைத்தும் துரிதமாக, தரமாக பணிகளை முடிக்க வேண்டும்.

இவ்வாறு முதல்வர் பேசினார்.


வாசகர் கருத்து (5)

  • Balaji - Chennai,இந்தியா

    தல..நாமோதான் இப்போ ஆளும் கச்சி.. மறந்து எதையாவது பேசி வைக்காதீங்க.. 150 சாதமானம் வாக்குறுதி நெவேத்தியாச்சி.. அப்புறம் என்ன.. இந்தாமீரி சின்ன சின்ன வேஷயத்தையெல்லாம் பேசி பெருசாக்காதிக..

  • Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா

    காய்ஞ்சு போன நதியெலாம் வற்றாத ஜீவ நதியை பார்த்து ஆறுதல் அடையும். அந்த ஜீவ நதியே காய்ஞ்சு போய்ட்டா? இந்த அரசின் இந்த போக்க கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம் நடத்தும் என எதிர் பார்க்கலாம்.

    • Gopi - Chennai,இந்தியா

      yerkanave antha kaamadiyai senjirukkaanga. avangale ponathadavai aalungatchiyaa irunthu avangalaiye ethirtthu poraattam senjirukkaanga

  • enkeyem - sathy,இந்தியா

    வேதனை, அறிவுரை மட்டும் தான். செயலில் ஜீரோ

  • Premanathan S - Cuddalore,இந்தியா

    ஒரே அறிவுரை மயம். செயலில் ஒன்றுமில்லை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement