ஜோதிகாவின் வலுவான அணியில் சேர கவுதம் மேனன் அழைப்பு
சென்னை:நடிகை ஜோதிகாவின் வலுவான அணியில் இணைய, சினிமா இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக கவுதம் வாசுதேவ் மேனன் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ பதிவில், 'நான் ஒரு வலுவான அணியை உருவாக்கப் போகிறேன்; நீங்களும் இணைய வேண்டுமா?' என, ஜோதிகா கேட்கிறார்.
அதைத் தொடர்ந்து அந்த வீடியோவில் பேசும் கவுதம் வாசுதேவ் மேனன், 'இளைஞர்களே, ஒரு அற்புதமான விஷயம் நடக்கப் போகிறது. இதற்கு மேல் என் எதிர்பார்ப்பையும், உற்சாகத்தையும் என்னால் மறைத்து வைக்க முடியவில்லை. நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். நீங்களும் வாருங்கள். அவரது வலுவான அணியில் சேருங்கள். பெரிய ஆச்சரியத்திற்காக காத்திருங்கள்!' என, அழைப்பு விடுத்துள்ளார்.
ஜோதிகாவும், கவுதம் வாசுதேவ் மேனனும் இணைந்து, சினிமா எடுக்கப் போகின்றனரா அல்லது ஒரு ரியாலிட்டி ஷோ நடத்தப் போகின்றனரா அல்லது ஒரு விளையாட்டு அணியை துவங்கப் போகின்றனரா என, தங்கள் எதிர்பார்ப்புகளை, சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!