கோபியா புதிய நிர்வாகிகள் தேர்வு
கோவை;கோயம்புத்துார் பவுண்டரி மற்றும் நிறுவன உரிமையாளர்கள் சங்கத்தின்(கோபியா), 34வது ஆண்டுபொதுக்குழு கூட்டம், சங்க அலுவலகத்தில் நடந்தது.
இதில், 2023-25ம் ஆண்டு காலகட்டத்துக்கான சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்தல், முன்னாள் தலைவர் மணி முன்னிலையில் நடந்தது. முடிவில், தலைவராக ராமநாதன், செயலாளர் விமல்ராஜ், பொருளாளர் லட்சுமணன், துணைத் தலைவர் தங்கராஜ், துணை செயலாளர் துருவன் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். சங்க உறுப்பினர்கள், முன்னாள் நிர்வாகிகள் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!