Load Image
Advertisement

இன்ஸ்டாவில் போலி கணக்கு இயக்குனர் பாலா புகார்

 Fake account director Bala complains on Insta    இன்ஸ்டாவில் போலி கணக்கு இயக்குனர் பாலா புகார்
ADVERTISEMENT
சென்னை:தன் பெயரில், 'இன்ஸ்டாகிராமில்' போலி கணக்கு துவக்கி, நடிகையருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியோர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, திரைப்பட இயக்குனர் பாலா, சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து, இயக்குனர் பாலா அளித்த புகார்:

சினிமா துறையில் இயக்குனராக, சேது, பிதாமகன், நான் கடவுள் உள்ளிட்ட பல படங்களை இயக்கி உள்ளேன். என் பெயரை களங்கப்படுத்தும் விதமாக, சமூக வலைதளமான, 'இன்ஸ்டாகிராமில்' என் பெயரில், போலியாக கணக்கு துவக்கப்பட்டு உள்ளது.

அக்கணக்கிலிருந்து, நடிகர் மற்றும் நடிகையருக்கு தவறாகவும், ஆபாசமாகவும் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு வருகிறது. நான், 'எக்ஸ்' வலைதளத்தை தவிர, 'பேஸ்புக், இன்ஸ்டாகிராம்' போன்ற, சமூக வலைதளங்களை உபயோகப்படுத்தவில்லை.

என் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுவோர் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement