தகராறை விலக்கி விட்ட முதியவர் அடித்து கொலை
திருச்சி:திருச்சி மாவட்டம், தாத்தையங்கார்பேட்டை அருகே பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி ஸ்ரீரங்கன், 67.
இவர், வீட்டின் அருகே நேற்று மதியம், அதே ஊரைச் சேர்ந்த விஜய், 18, என்பவரும், அவரது உறவினர் விஜயகுமார், 30, என்பவரும், மதுகுடித்து, ஸ்ரீரங்கன் மகன் கார்த்திக்கிடம் தகராறில் ஈடுபட்டுஉள்ளனர்.
அங்கிருந்த ஸ்ரீரங்கன், அவர்களை விலக்கி விட சென்ற போது, விஜயும், விஜயகுமாரும் சேர்ந்து, கையாலும், குச்சியாலும் அடித்ததில், தலையில் படுகாயமடைந்த ஸ்ரீரங்கன், சம்பவ இடத்திலேயே இறந்தார்.
தா.பேட்டை போலீசார் விஜய், விஜயகுமாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!