Load Image
Advertisement

விஸ்வகர்மா முன்னேற்றத்துக்கு கோவையில் ஜூவல் பார்க்! நகை தயாரிப்பாளர் சங்கம் கோரிக்கை

கோவை:நகைத் தொழிலை முன்னேற்றும் வகையில், கோவையில் அது சார்ந்த கல்வி நிறுவனம் மற்றும் ஜூவல் பார்க் அமைக்க வேண்டுமென்று, மத்திய அரசுக்கு கோவை நகை தயாரிப்பாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, மத்திய நிதி இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரிக்கு, இந்த அமைப்பின் தலைவர் முத்து வெங்கட்ராம், செயலாளர் சுரேஷ்குமார், பொருளாளர் வெங்கடேஷ் ஆகியோர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை வரவேற்கிறோம்; நன்றி கூறுகிறோம். கோவையில் 595 பதிவு பெற்ற ஜூவல்லரிகள் இயங்கி வருகின்றனர்.

நகை தயாரிப்பில் நேரடியாகவும், மறைமுகமாகவும் 45 ஆயிரம் பேர் வேலை வாய்ப்புப் பெறுகின்றனர். ஆண்டுக்கு 100 டன் அளவுக்கு நகை தயாரிக்கப்படுகிறது. இத்தொழிலை மேலும் முன்னேற்ற மத்திய அரசு, சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டுகிறோம். நகைத் தொழிலாளர்களுக்கு இலவச இருப்பிடம் மற்றும் ஓய்வூதியத் திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும். இத்துறைக்கு தனி அமைச்சரவை உருவாக்குவது அவசியம்.

நகை தயாரிப்புக் கூடங்களுக்கு, வீட்டு மின் இணைப்புக்கான கட்டணம் வசூலிக்க, தமிழக அரசுக்குப் பரிந்துரைக்க வேண்டும். நகைத் தொழிலாளர்களுக்கு கடனுதவி வழங்க, சிறப்பு நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும்.

இத்தொழிலை மேலும் மேம்படுத்தும் வகையில், இயந்திரங்கள் வாங்குவதற்கு சிறப்பு மானியங்களை வழங்க வேண்டும்.

நகைத் தயாரிப்புத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு, பட்டப்படிப்புப் படிப்பதற்கு சிறப்புத் திட்டத்தை, மத்திய அரசு அறிவிக்க வேண்டும். புலம் பெயர் தொழிலாளர்களுக்கு, இலவச ரேசன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்க வேண்டும்; கோவையில் நகைத் தயாரிப்புத் தொழில் சார்ந்த, கல்வி நிலையத்தை மத்திய அரசு உருவாக்க வேண்டும்.

இத்தொழிலில் சிறந்து விளங்குவோருக்கும், சிறப்பான தயாரிப்புகளுக்கும் ஆண்டுதோறும் விருது வழங்கப்பட வேண்டும். கோவையில் மத்திய அரசின் சார்பில் 'ஜூவல் பார்க்' அமைக்க வேண்டும்.

இவ்வாறு, அந்தக் கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement