25 கி.வாட் இணைப்பு ஏ.இ.,க்கு அதிகாரம்
சென்னை:தமிழக மின் வாரியம், 150 கிலோ வாட் வரை தாழ்வழுத்த பிரிவிலும், அதற்கு மேல் உயரழுத்த பிரிவிலும் மின் இணைப்பு வழங்குகிறது.
வீடுகளுக்கு ஒரு முனை மற்றும் மும்முனை என, இரு பிரிவுகளில், மின் சாதனங்களின் பயன்பாட்டை பொறுத்து, 4 கிலோ வாட், 8 கி.வாட் என, பல்வேறு திறன்களில், புதிய மின் இணைப்பு வழங்கப்படுகிறது.
வீடு மற்றும் வணிக புதிய மின் இணைப்பு மற்றும் தற்காலிக மின் இணைப்பு வழங்குவதற்கான அதிகார பகிர்வை மாற்றி அமைத்து, மின் வாரியம் உத்தரவிட்டு உள்ளது.
அதன்படி, 25 கி.வாட் வரை உதவி பொறியாளருக்கும்; 50 கிலோ வாட் வரை உதவி செயற்பொறியாளருக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. உதவி பொறியாளரின் கீழ் ஒரு பிரிவு அலுவலகமும்; உதவி செயற்பொறியாளரின் கீழ் நான்கு பிரிவு அலுவலகமும் செயல்படுகின்றன.
இதற்கு முன், 50 கி.வாட் வரை இணைப்பு வழங்க, உதவி பொறியாளருக்கு அதிகாரம் இருந்தது.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!