தலைமறைவு குற்றவாளிகள் இருவர் கைது
செம்பியம், வியாசர்பாடி, பெரியார் நகரை சேர்ந்தவர் படவேட்டான், 54; எலக்ட்ரீஷியன். இவர், வீடு விற்ற பணத்தில், 2 லட்ச ரூபாயை, சொந்த ஊரை சேர்ந்த செந்தாமரை மற்றும் அவரது மகன்களுக்கு கடனாக கொடுத்துள்ளார்.
அப்பணத்தை திருப்பி கேட்ட போது, பணத்தை தராததோடு, படவேட்டானை மிரட்டியும் உள்ளனர்.
இதையடுத்தது கடந்த மே மாதம், பெரம்பூரில் அண்ணன் வீட்டில், மின்விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இறப்பதற்கு முன் எழுதிய கடிதத்தில், பணம் கொடுத்த ஏமாந்ததை குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்த செம்பியம் போலீசார், தலைமறைவாக இருந்த வந்தவாசி தாலுகா ஊர்குடி கிராமத்தை சேர்ந்த செந்தாமரை, 59 மற்றும் அவரது மகன் ராஜேஷ், 32, ஆகிய இருவரையும் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ராஜசேகர் என்பவரை தேடி வருகின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!