அடிக்கடி தீப்பற்றி எரியும் மின் கேபிள்கள்
திரு.வி.க., நகர், அருந்ததி நகர் மேட்டுப்பாளையத்தில், குறைந்த அதிக மின் அழுத்தம் காரணமாக, மின் கேபிள்கள், அடிக்கடி தீ பிடித்து எரிகின்றன.
சமீபத்திலும், வீரராகவன் தெரு, பெரியபாளையத்தம்மன் கோவில் தெரு ஆகியவற்றில், மின் கேபிள்கள் தீப்பற்றி எரிந்தன. இது குறித்து, மின் வாரிய அலுவலகத்தில் புகார் செய்தும் உடனடி நடவடிக்கை இல்லை. மேற்கண்ட பிரச்னையால், அருந்ததி நகர், மேட்டுப்பாளையத்தில் வசிப்போர் அச்சத்திற்கு ஆளாகி அவதிப்படுகின்றனர். மின் வாரியம் இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண முன் வரவேண்டும்.
பொதுமக்கள், அருந்ததி நகர், திரு.வி.க.நகர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!