லஞ்ச வி.ஏ.ஓ.,விற்கு 3 ஆண்டுகள் சிறை
விருத்தாசலம்:கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த முதனை கிராமத்தைச் சேர்ந்தவர் ஞானப்பிரகாசம், 38; இவர், 2017ல் வாரிசு சான்றிதழ் பெற விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
அப்போதைய பெரியகாப்பான்குளம் வி.ஏ.ஓ., தாமோதரன், 47, சான்றிதழ் வழங்க, 2,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். ஞானப்பிரகாசம், கடலுார் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் தாமோதரனை கைது செய்தனர். உடந்தையாக இருந்த கிராம உதவியாளர் ரவீந்திரகுமார பாண்டியன், 59, என்பவரும் கைது செய்யப்பட்டார். வழக்கு விசாரணை கடலுார் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது.
நீதிபதி பிரபாகர், தாமோதரனுக்கு 3 ஆண்டு சிறை, 3,000 ரூபாய் அபராதம், ரவீந்திர குமார பாண்டியனுக்கு 2 ஆண்டு சிறை, 2,000 ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!