அக்.,5க்குள் பூத் கமிட்டி அமைக்க அ.தி.மு.க.,வினருக்கு அறிவுறுத்தல்
கோவை;பாராளுமன்ற தேர்தலுக்கு கோவை அ.தி.மு.க., தயாராகி வருகிறது. அக்.,5க்குள் பூத் கமிட்டி, மகளிர் அணி மற்றும் இளைஞர், இளம்பெண்கள் பாசறைக்கான நிர்வாகிகள் பட்டியலை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
வரும், 2024ல் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை சந்திப்பதற்கு அரசியல் கட்சிகள் தயாராக ஆரம்பித்து விட்டன.
'ஒரே நாடு ஒரே தேர்தல்' தொடர்பான ஆலோசனை ஒருபுறம் நடந்து வருவதால், ஒரே நேரத்தில் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றத்துக்கு தேர்தல் வருமா அல்லது, பாராளுமன்ற தேர்தல் மட்டும் நடத்தப்படுமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. அதனால், கட்சியினரை தயார்படுத்தும் பணியில், நிர்வாகிகள் ஈடுபட்டிருக்கின்றனர்.
கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், நீலகிரி ஆகிய நான்கு தொகுதிகளுக்கு, அ.தி.மு.க.,வில் முன்னாள் அமைச்சர் வேலுமணி, பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
அவர், கட்சியை தயார்படுத்தும் பணியை துரிதப்படுத்தியுள்ளார். பூத் கமிட்டி, மகளிரணி, இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறைக்கு நிர்வாகிகள் நியமித்து, அக்.,5க்குள் கட்சி தலைமையில் பட்டியல் சமர்ப்பிக்க, பொறுப்பாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறது.
பூத் கமிட்டிக்கு, ஒரு தலைவர், 6 உறுப்பினர்கள், மகளிரணிக்கு - 5 பேர், இளைஞர் - இளம்பெண் பாசறை (ஆண்-3, பெண்-2), தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு - 2 பேர் என, 19 பேர் நியமிக்க வேண்டும்.
மகளிரணிக்கு, 18 பேர், கூடுதலாக, 7 பேர் என, 25 பேர் நியமிக்க வேண்டும். இளைஞர், இளம்பெண் பாசறைக்கு, தலைவர்-1, துணை தலைவர்-2, செயலாளர்-1, இணை செயலாளர்-2, துணை செயலாளர்-2, பொருளாளர்-1, செயற்குழு உறுப்பினர்கள்-6, பாசறை உறுப்பினர்கள்-10 பேர் நியமிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, அ.தி.மு.க.,வினர் கூறுகையில், 'பூத் கமிட்டி, மகளிரணி நிர்வாகிகள் நியமனத்துக்கு மேலோட்டமாக வேலை செய்யக் கூடாது. ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களை நியமிக்கக் கூடாது.
பொறுப்பாளர்கள் சரியாக வேலை செய்ய வேண்டும்; இல்லையெனில், மாற்றம் செய்ய வேண்டிய சூழல் வரும்; சங்கடப்படாதீர்கள். கட்சிக்கு இளம் ரத்தம் வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்றனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!