Load Image
Advertisement

ஆம்னி பஸ் ஸ்டாண்ட் புனரமைக்க ஒருவழியாக ஓகே! ரூ.2.95 கோடி பணிக்கு டெண்டர்

Tender for Rs 2.95 crore work to rehabilitate Omni Bus Stand OK!   ஆம்னி பஸ் ஸ்டாண்ட் புனரமைக்க ஒருவழியாக ஓகே! ரூ.2.95 கோடி பணிக்கு டெண்டர்
ADVERTISEMENT
கோவை;காந்திபுரம் ஆம்னி பஸ் ஸ்டாண்டை ரூ.2.95 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வசதிகளுடன் புனரமைக்க அரசு அனுமதி அளித்துள்ளதையடுத்து, 'டெண்டர்' நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காந்திபுரம் ஆம்னி பஸ் ஸ்டாண்டில் இருந்து சென்னை, மதுரை உட்பட தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களுக்கும் தினமும், 100க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ் ஸ்டாண்ட், 1.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

பஸ்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், இட நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. ரோட்டோரம் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்ற வேண்டியுள்ளதால், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

பஸ் ஸ்டாண்ட் உள்ளே குண்டும், குழியுமாக இருப்பதுடன், பயணிகளை இறக்கிவிட வரும் இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள், உள்ளே செல்ல முடியாத நிலை உள்ளது.

ஆம்னி பஸ் ஸ்டாண்டை வேறு இடத்துக்கு மாற்றித்தருமாறு, ஆம்னி பஸ் உரிமையாளர்கள் பல ஆண்டுகளாக, கோரிக்கை விடுத்து வருகின்றனர். இடவசதியின்மை உள்ளிட்ட காரணங்களால், வேறு இடத்துக்கு மாற்றுவதில், சுணக்கம் ஏற்பட்டு வருகிறது.

இதையடுத்து, மாநகராட்சி ரூ.2.95 கோடி மதிப்பீட்டில் பஸ் ஸ்டாண்ட் நுழைவாயில், பெயர் பலகை, பஸ்கள் நிறுத்தும் இடம், பேவர் பிளாக் கற்கள் புனரமைப்பு, புதிய கழிவறைகள், கடைகள் புதுப்பித்தல் என, பல்வேறு வசதிகளை மேம்படுத்தவுள்ளது.

மாநகராட்சி கமிஷனர் பிரதாப் கூறுகையில், ''ஆம்னி பஸ் ஸ்டாண்டை ரூ.2.95 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பதற்கு, திட்ட அறிக்கை தயாரித்து கருத்துரு அனுப்பினோம்; அரசும் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, 'டெண்டர்' கோரப்பட்டுள்ளது. இதில், நிழற்கூரை, நடைபாதை என, பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படும்,'' என்றார்.

இன்னும் வசதிவேண்டும்

ஆம்னி பஸ் உரிமையாளர்கள் கூறுகையில், 'தற்போது, 40 பஸ்கள் மட்டுமே இங்கு நிறுத்த முடியும். ஆனால், 100க்கும் மேற்பட்ட பஸ்கள் தினமும் வந்து செல்கின்றன. 2008ம் ஆண்டில் போடப்பட்ட 'டிசைன்' இது. பஸ் ஸ்டாண்ட் புனரமைப்பு என்பது, நெரிசல் பிரச்னைக்கு தீர்வு தரும்; அதேசமயம், 'சிசிடிவி' கேமராக்கள் நிறுவுவதுடன், டிரைவர்கள் ஓய்வறை, பயணிகள் தங்கும் அறை, வாகன நிறுத்தம் உள்ளிட்ட வசதிகளுக்கும் நடவடிக்கை எடுத்து, பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்' என்றனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement