Load Image
Advertisement

பழனி முருகன் கோவிலில் மொபைல் போனுக்கு தடை

பழனி:திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் மொபைல் போன், போட்டோ, வீடியோ எடுக்கும் கருவிகளை கொண்டு வர கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.

கமிஷனர் மாரிமுத்து கூறியதாவது:

பழனி கோவிலுக்கு போட்டோ, வீடியோ எடுக்கும் கருவிகள், மொபைல் போன் கொண்டு வருவதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும். இத்தகைய சாதனங்களை படிப்பாதை, வின்ச், ரோப் கார் ஸ்டேஷன்களில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையங்களில் வழங்க வேண்டும்.

இதற்கு கட்டணமாக மொபைல் போனுக்கு 5 ரூபாய் பெறப்படும். தரிசனம் முடிந்த பின் அவற்றை பெற்றுக்கொள்ளலாம். அக்., 1 முதல் இந்த நடைமுறை அமலுக்கு வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement