Load Image
Advertisement

கோவையில் விநாயகர் சிலை கரைப்பு சென்னையில் இருந்து கண்காணிப்பு

கோவை;கோவையில் விநாயகர் சிலைகள் கரைப்பு மற்றும் ஊர்வலத்தை, சென்னை டி.ஜி.பி., அலுவலகத்தில் இருந்தும் கண்காணிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தியையொட்டி, கோவை மாநகரில் வடக்கு மற்றும் தெற்கு போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் முறையே, 342 மற்றும், 340 என, மொத்தம், 682 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

முதற்கட்டமாக இன்று, 348 சிலைகள் விசர்ஜனம் செய்யப்படுகின்றன. இதற்காக மாநகரில், 1916 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விசர்ஜனத்தை முன்னிட்டு, நடக்கும் ஊர்வலத்தை கண்காணிப்பு கேமராக்கள் மூலம், சென்னை டி.ஜி.பி., அலுவலகத்தில் இருந்து நேரடியாக கண்காணிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

போலீசார் கூறுகையில், 'விநாயகர் விசர்ஜனத்தை முன்னிட்டு, ஊர்வலம் நடக்கும் பாதையில், பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஊர்வலம் செல்லும் பாதையில், 1,000 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இதன் வாயிலாக, கோவை கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். சென்னை டி.ஜி.பி., அலுவலகத்தில் இருந்தும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட உள்ளது.

ஊர்வலத்தில் பங்கேற்க பிற மாவட்டத்தினருக்கு அனுமதியில்லை. ஊர்வலத்தில் பங்கேற்பவர்கள் குறித்த பட்டியல் ஏற்கனவே பெறப்பட்டுள்ளது.

பட்டியலில் இல்லாத நபர்கள் பங்கேற்றால், விழா ஏற்பாட்டாளர்கள் மீது வழக்கு பதிந்து, கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பட்டியலில் இல்லாத நபர் குறித்த தகவல் ஏற்பாட்டாளர்களுக்கு தெரியவில்லை எனில், அந்நிய நபரை கைது செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஊர்வலத்தை அமைதியாக நடத்த, அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன' என்றனர்.

எத்தனை சிலைகள் எங்கு விசர்ஜனம்

கோவை குறிச்சி குளத்தில், 113, குனியமுத்துார் குளத்தில், 43, சிங்காநல்லுார் குளத்தில், 49, வெள்ளக்கிணறு குளத்தில், 143, என, 348 சிலைகளுக்கான விசர்ஜனம் இன்று நடக்கிறது. மீதமுள்ள சிலைகள் வரும், 22ம் தேதி கரைக்கப்பட உள்ளன. இதில் முத்தணன் குளத்தில், 267 சிலைகள் கரைக்கப்பட உள்ளன. சிங்காநல்லுார் குளத்தில் நேற்று, 9 சிலைகள் கரைக்கப்பட்டன.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement