ADVERTISEMENT
திருவல்லிக்கேணி, சென்னை, திருவல்லிக்கேணி, பெசன்ட் சாலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன், பசுமாடு ஒன்று கண்ணில் பட்டவர்களை எல்லாம் முட்டியது.
இதில், போலீஸ்காரர் உட்பட ஆறு பேர் காயமடைந்தனர். மாநகராட்சி அதிகாரிகள் மாட்டை பிடித்துச் சென்றனர். ஐஸ் அவுஸ் போலீசார், மாட்டின் உரிமையாளர் தேவராஜ் என்பவர் மீது இரு வழக்குகள் பதிவு செய்தனர்.
இந்நிலையில் மீண்டும் திருவல்லிக்கேணி, பெல்ஸ் சாலையில் மாடுகள் சுற்றித் திரிகின்றன. இதனால், பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
ஒரு சம்பவம் நடந்த பிறகும், மீண்டும் மாடுகள் சுற்றி திரிவதைக் கண்ட மக்கள், மாற்று சாலையில் செல்கின்றனர்.
பள்ளி குழந்தைகளும் அதிக அளவில் அந்த சாலையை பயன்படுத்துவதால், மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!