Load Image
Advertisement

மனை வரன்முறைப்படுத்த இரு நாள் சிறப்பு முகாம்

கோவை;அனுமதியற்ற மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த ஏதுவாக, மாநகராட்சி மண்டல அலுவலகங்களில், இரு நாள் சிறப்பு முகாம் நடக்கிறது.

மாநகராட்சியில் அனுமதியற்ற மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த, தமிழ்நாடு வீட்டு வசதி துறை வாயிலாக, ஆறு மாத காலம் என அடுத்தாண்டு பிப்., மாதம் வரை, கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

எனவே, பொது மக்கள் 2016ம் ஆண்டு அக்., 20ம் தேதிக்கு முன் பதிவு செய்யப்பட்ட மனை மற்றும் பிரிக்கப்பட்ட மனை பிரிவுகளை, வரன்முறைப்படுத்த ஏதுவாக, மாநகராட்சி சார்பில் வரும், 27 மற்றும் அக்., 4ம் தேதிகளில், சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.

மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் நடக்கும் இம்முகாம்களில், பொது மக்கள் தங்களது மனை ஆவணம், வரைபடம் மற்றும் வங்கி கணக்கில் இருந்து விண்ணப்ப கட்டணமாக ரூ.500 ஆன்லைனில் செலுத்தி, உரிய கால கெடுவுக்குள் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்து பயன்பெறலாம் என, மாநகராட்சி கமிஷனர் பிரதாப் தெரிவித்துள்ளார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement