ரேஷன் அரிசி கடத்துவோர் யார் தகவல் தெரிந்தால் சொல்லுங்கள்
போத்தனூர்;கோவை மாவட்டம் உட்பட, மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்தும் கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுகிறது. இதனை தடுக்க, குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்களை கடத்துவோர் குறித்த விபரங்களை போலீசாருக்கு தெரிவிக்க, 1800 599 5950 எனும் கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த சுவரொட்டிகள், பொள்ளாச்சி குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசாரால், ரயில்வே ஸ்டேஷன்கள், பஸ் ஸ்டாப்கள், மதுக்கரை மார்க்கெட், சுந்தராபுரம்,குனியமுத்தூர், வெள்ளலூர், ஆனைமலை, கோட்டூர், ஆழியார், நெகமம், கிணத்துகடவு . மீனாட்சிபுரம், கோவிந்தாபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் ஒட்டப்பட்டுள்ளன.
இந்த எண்ணுக்கு, தனி கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, 24 மணி நேரமும் செயல்படும். கடத்தல்காரர்கள் குறித்து தகவல் தருவோர் விபரம் வெளியிடப்படாது எனவும், அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!