ADVERTISEMENT
அண்ணா நகர், அண்ணா நகர் மண்டலம், 101வது வார்டு, கிழக்கு அண்ணா நகர், குஜ்ஜி தெரு உள்ளது. இங்குள்ள பகுதிகளில் நுாற்றுக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
குஜ்ஜி பிரதான சாலையில், சென்னை மாநகராட்சியின் நகர்ப்புற நல வாழ்வு மையம் இயங்கி வருகிறது. இந்த மையத்தின் எதிரில், பல நாட்களாக மழை நீருடன் கழிவுநீர் தேங்கி, துார்நாற்றம் வீசுகிறது.
இதுகுறித்து அப்பகுதியில் வசிப்பவர்கள் கூறியதாவது:
குஜ்ஜி தெருவில் வடிகால் இருந்தும், பல இடங்களில் மழைநீர் தேங்குவது வாடிக்கையாகி விட்டது. சுகாதார மையம் அருகிலேயே மழைநீர் தேங்கி, தற்போது கழிவுநீராக மாறி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனை அருகிலும் இதுபோன்ற சீர்கேடு உள்ளதால், நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இங்கு தேங்கி உள்ள நீரை அகற்றுவதற்கும், நிரந்தமாக தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!