சோலார் மின்வேலி வனத்துறை விளக்கம்
ஆலாந்துறை:பச்சினாம்பதியில், விவசாயிகளுக்கு சோலார் மின்வேலி தொடர்பான சந்தேகங்களை வனத்துறையினர் விளக்கி, செயல்முறை விளக்கம் அளித்தனர்.
மதுக்கரை வனச்சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகளிடம், வனத்துறையினர் குறை கேட்பு கூட்டம், பச்சினாம்பதியில் நேற்று நடந்தது.
இக்கூட்டத்திற்கு, மதுக்கரை வனச்சரகர் சந்தியா தலைமை வகித்தார். இதில், மத்திபாளையம், கரடிமடை, தீத்திபாளையம், மோளப்பாளையம், காளிமங்கலம், பச்சினாம்பதி, பெருமாள்கோவில்பதி, நல்லூர்வயல் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், தங்களின் குறைகளை வனத்துறையினரிடம் தெரிவித்தனர்.
விவசாயிகளுக்கு, தனியார் சோலார் நிறுவனத்தின் மூலம், சோலார் மின்வேலி பயன்படுத்துவது குறித்தும், வனத்துறையினருக்கு, சோலார் மின்வேலியை சோதனை செய்யும் முறை குறித்தும், செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
அதன்பின் வனத்துறை சார்பில், வனப்பகுதியையொட்டியுள்ள விவசாயிகளின் பாதுகாப்பிற்காக டார்ச் லைட் வழங்கப்பட்டது. வேட்டைதடுப்பு காவலர் மற்றும் வனப்பணியாளர்களுக்கு, ரெயின்கோட் வழங்கப்பட்டது.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!