பாரம்பரிய காய்கறி விதை உற்பத்திக்கு பரிசு
கோவை;பாரம்பரிய காய்கறி விதைகளை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு, தோட்டக்கலைத்துறை சார்பில் பரிசு வழங்கப்படுகிறது.
இது குறித்து, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் புவனேஸ்வரி கூறியதாவது:
பாரம்பரிய பயிர்களை உற்பத்தி செய்யும் விவசாயிகள், தங்கள் பகுதியில் உள்ள வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர்களை தொடர்பு கொண்டு, தங்கள் பெயர்களை இந்த மாதம் இறுதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம்.
தரமான பாரம்பரிய காய்கறி விதைகளை, உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு பரிசு வழங்கப்படுகிறது.
கலெக்டர் தலைமையில் அமைக்கப்படும் குழு மூலம், பரிசுக்குரிய விவசாயிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, முதல் பரிசாக, 15 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசாக, 10 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும். இந்த வாய்ப்பை பாரம்பரிய விதைகள் உற்பத்தி செய்யும் விவசாயிகள், பயன்படுத்திக்கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!