சரவணம்பட்டியில் விநாயகர் தேர்த்திருவிழா
சரவணம்பட்டி;சரவணம்பட்டி சிரவணமாபுரீசுவர் கோவில் விநாயகர் தேர்த்திருவிழா நேற்று நடந்தது.
தேர்த்திருவிழா ஊர்வலத்தை, நேற்று மாலை 5:00 மணிக்கு சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் துவக்கி வைத்தார்.
சாந்தலிங்க மருதாசல அடிகள் முன்னிலை வகித்தார். 126ம் ஆண்டு திருவிழாவில், ஊர் பொதுமக்கள் வடம் பிடித்தனர்.
பல்வேறு அலங்கார பொம்மைகள், உருவாரங்களுடன் ஊர்வலம் சிரவணமாபுரீசுவர் கோவிலில் இருந்து புறப்பட்டது.
விளாங்குறிச்சி ரோடு, சத்தி ரோடு, பெரியார்நகர், விளாங்குறிச்சி ரோடு வழியாக மீண்டும் தேர் நிலைக்கு வந்தது. சிரவணமாபுரீசுவர் வழிபாட்டு மன்றம் விழா ஏற்பாடுகளை செய்திருந்தது.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!