கோயம்பேடில் பயணியிடம் நகை திருடியவர் கைது
கோயம்பேடு, மடிப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ், 41. இவரது மனைவி மோகனா, 38. இவர், திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் நடந்த, உறவினரின் திருமணத்திற்கு செல்ல, கடந்த 16ம் தேதி கோயம்பேடு பேருந்து நிலையம் சென்றார்.
அங்கு, மோகனா தன் குழந்தைக்கு சாப்பாடு கொடுத்த நேரத்தில், அங்கு வந்த மர்ம நபர், 17 சவரன் நகை வைத்திருந்த பையை திருடிச் சென்றார்.
இதுகுறித்த புகாரை விசாரித்த கோயம்பேடு போலீசார், நகை பையை திருடிய, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த டின்சின் நாமகாட், 26, என்பவரை கைது செய்தனர். இவர், தன் நண்பருடன் சேர்ந்து மது அருந்த, சிறு சிறு திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார்.
சம்பவத்தன்று, மது அருந்த பணத்திற்காக பையை திருடிய போது, அதில் நகை இருந்துள்ளது. அதை அடகு வைத்து, இருவரும் மது அருந்தி உள்ளனர். இதையடுத்து, தலைமறைவாக உள்ள மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!