Load Image
Advertisement

பயன்படுத்த இயலாத 12 கிலோ கோழி இறைச்சி  பறிமுதல் : ஆய்வு நடத்தி உணவுப்பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி

 Seizure of 12 kg unusable chicken meat: Food safety officials take action after conducting inspection    பயன்படுத்த இயலாத 12 கிலோ கோழி இறைச்சி  பறிமுதல் : ஆய்வு நடத்தி உணவுப்பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி
ADVERTISEMENT
கோவை;உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய ஆய்வில், பயன்படுத்த இயலாத, 12 கிலோ கோழி இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.

நாமக்கலில் உள்ள ஒரு ஓட்டலில், 'ஷவர்மா' உட்கொண்ட, 14 வயது பள்ளி மாணவி, உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தார். 43க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஓட்டல் உரிமையாளர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து, தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்ரமணியன், அனைத்து ஓட்டல்களிலும் ஆய்வு செய்ய, உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

நேற்று, கோவை மாவட்ட உணவுப்பாதுகாப்பு அதிகாரிகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

மாவட்ட உணவுப்பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தமிழ்செல்வன் கூறியதாவது:

கோவை மாநகரில் உள்ள, 36 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், 12 கிலோ பயன்படுத்த முடியாத, கோழி இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.

இரு கடைகளுக்கு, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்பட்டதற்கான அபராதம் விதிக்கப்பட்டது.

நிறமிகள் ஏற்றப்பட்ட உணவுப் பொருட்கள், 1.5 கிலோ, அரை வேக்காட்டு நிலையில் இருந்த ஷவர்மா கோழி இறைச்சி 4.5 கிலோ, பிற இறைச்சிகள், 17.95 கிலோ பறிமுதல் செய்யப்பட்டன. ஆய்வுக்குப் பின், மூன்று உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

இது தொடர்பாக, ஆறு கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன், 33 கடைகளில், டெங்கு பரவல் குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டது.

இதில், ஈடிஸ் கொசு உற்பத்திக்கு வழிவகை செய்த, நான்கு இடங்கள் கண்டறியப்பட்டு அவை அழிக்கப்பட்டன. சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது.

இவ்வாறு, அவர் கூறினார்.

நிறமிகள் ஏற்றப்பட்ட உணவுப் பொருட்கள், 1.5 கிலோ, அரை வேக்காட்டு நிலையில் இருந்த ஷவர்மா கோழி இறைச்சி 4.5 கிலோ, பிற இறைச்சிகள், 17.95 கிலோ பறிமுதல் செய்யப்பட்டன. ஆய்வுக்குப் பின், மூன்று உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இது தொடர்பாக, ஆறு கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement