என்கவுன்டரில் 2 பேர் சாவு சி.பி.சி.ஐ.டி., விசாரணை
சென்னை, கூடுவாஞ்சேரியில், 'என்கவுன்டரில்' இருவர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து, சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி, காரணை புதுச்சேரி பகுதியில் ரவுடிகள் வினோத், ரமேஷ் ஆகியோர் என்கவுன்டரில் கொல்லப்பட்டனர். கடந்த மாதம் 1ம் தேதி இந்த சம்பவம் நடந்தது.
இதுகுறித்து, சி.பி.சி.ஐ.டி., விசாரணை கோரி, வினோத்தின் தாய் ராணி, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில்,'சிறுசேரியில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்தவர்களை, போலீசார் அழைத்துச் சென்று என்கவுன்டர் செய்துள்ளனர். இது, போலி என்கவுன்டர்' என கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கை, சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றியும், டி.எஸ்.பி., அந்தஸ்துடைய அதிகாரி விசாரிக்கவும், நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!