Load Image
Advertisement

செங்கல் சூளை புகையில் சிக்கி தம்பதி பரிதாப பலி

 Couple trapped in brick kiln smoke tragically died    செங்கல் சூளை புகையில் சிக்கி தம்பதி பரிதாப பலி
ADVERTISEMENT
வேலுார்:வேலுார் மாவட்டம், கணியம்பாடி அடுத்த புதுார் கிராமத்தைச் சேர்ந்தவர் தெய்வசிகாமணி, 40. இவரது மனைவி அமுல், 30. தம்பதிக்கு, 16, 14, 12, வயதில் மகன், மகள் உள்ளனர்.

வாடகை நிலத்தில், 15 ஆண்டுகளாக தெய்வசிகாமணி செங்கல் சூளை நடத்தி வந்தார். மனைவி அவருக்கு உதவியாக இருந்தார். நேற்று முன்தினம் இரவு சூளையில் செங்கற்களை வேக வைக்க தீ மூட்டிய நிலையில், மழை பெய்தது. இதனால் அங்கிருந்த தற்காலிக ஷெட்டில் இருவரும் துாங்கினர்.

தொடர் மழையால் சூளை நனைந்து, தீயிலிருந்து நள்ளிரவில் அதிகளவில் புகை ஏற்பட்டது. துாக்கத்தில் இருந்த தம்பதியர், இந்த புகையை தொடர்ச்சியாக சுவாசித்ததில், மூச்சுத் திணறல் ஏற்பட்டு பலியாகினர். கணியம்பாடி போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரிக்கின்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement