ரவுடி கொலை வழக்கில் கோர்ட்டில் 2 பேர் சரண்
ஸ்ரீபெரும்புதுார், ஸ்ரீபெரும்புதுார் அருகே ரவுடி எபினேசன் நாட்டு வெடிகுண்டு வீசி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் இருவர் நேற்று நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை பகுதியைச் சேர்ந்த ரவுடி எபினேசன், 31, ஸ்ரீபெரும்புதுார் அருகே மண்ணுார் பகுதியில், கடந்த 5ம் தேதி நாட்டு வெடிகுண்டு வீசி சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை ஸ்ரீபெரும்புதுார் போலீசார் தேடி வந்தனர்.
இந்த கொலை வழக்கில், கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில், ஐந்து பேர் கடந்த 7ம் தேதி சரணடைந்தனர். மேலும் சிலரை ஸ்ரீபெரும்புதுார் போலீசார் தேடி வந்த நிலையில், ஸ்ரீபெரும்புதுார் அருகே, தண்டலம் பகுதியைச் சேர்ந்த ஜீவன், 21, திருவள்ளூரைச் சேர்ந்த அன்பு, 26, ஆகிய இருவர் நேற்று, சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இவர்கள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!