Load Image
Advertisement

யு டியூபர் வாசன் சிறையிலடைப்பு வாகன ஓட்டுனர் உரிமம் ரத்து

 U Tuber Vasan jailed, driving license cancelled    யு டியூபர் வாசன் சிறையிலடைப்பு வாகன ஓட்டுனர் உரிமம் ரத்து
ADVERTISEMENT
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் அதிவேகத்தில் சாகசம் செய்து விபத்து ஏற்படுத்திய, 'யு டியூபர்' டி.டி.எப்.வாசன் என்பவர், கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது வாகன ஓட்டுனர் உரிமம், ரத்து செய்யப்பட்டு உள்ளது.

கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் டி.டி.எப்.வாசன், 24. இவர் இருசக்கர வாகனங்களில், அதிவேகமாக சென்று சாகசம் செய்வது வழக்கம்.

அதை, 'யு டியூப்' சமூக வலைதளத்தில் பதிவு செய்து பிரபலமானார். இவர் மீது, சாலையில் செல்வோரை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாக வாகனம் ஓட்டியது தொடர்பாக ஏற்கனவே வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், கடந்த 17ல் சென்னையில் இருந்து, ஓசூருக்கு 'யாயாபூசா' என்ற இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற போது, காஞ்சிபுரம் அடுத்த, தாமல் அருகே ஒரே சக்கரத்தில் சென்று, சாகசம் செய்ய முயன்று உள்ளார். அப்போது நிலை தடுமாறி விபத்தில் சிக்கினார்.

இதில் துாக்கி வீசப்பட்டு, வயல்வெளியில் விழுந்தார். அவரது டூ - வீலர், நுாறு மீட்டர் துாரத்திற்கு குட்டிக்கரணம் அடித்து சென்று விழுந்தது.

காயமடைந்த வாசன், காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினார். இந்த விபத்து குறித்து பாலுசெட்டிசத்திரம் போலீசார், ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

நேற்று அவரை கைது செய்து, காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின், 15 நாள் காவலில் சென்னை, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே, போலீசார் பரிந்துரையை ஏற்று, வாசனின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement