Load Image
Advertisement

கொரோனா காலத்தில் உயிரை கொடுத்து பாடுபட்டவர்களுக்கு தரும் பரிசா இது? துாய்மை பணியாளர்கள் கேள்வி

 Is this a gift to those who gave their lives during the Corona period? QUESTION OF CLEANING STAFF    கொரோனா காலத்தில் உயிரை கொடுத்து பாடுபட்டவர்களுக்கு தரும் பரிசா இது? துாய்மை பணியாளர்கள் கேள்வி
ADVERTISEMENT
கோவை;மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. இதில், பல்வேறு கோரிக்கைகள் சார்ந்த, 33 மனுக்களை மேயர் கல்பனாவிடம் பொது மக்கள் அளித்தனர்.

மாநகராட்சி கமிஷனர் பிரதாப் முன்னிலையில் நடந்த கூட்டத்தில், துறை சார்ந்த அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டது.

மக்கள் நீதி மய்யம் மாநகர செயலாளர் மாரியப்பன் அளித்த மனுவில், 'மாநகராட்சி, 25வது வார்டுக்கு உட்பட்ட, குடிநீர் வடிகால் வாரிய அலுவலகம் எதிரே, ரோட்டில் வாகன போக்குவரத்து அதிகம் உள்ளது.

இந்த ரோட்டில் உள்ள நான்கு முனையில், எந்த ஒரு வேகத்தடையும் இல்லாத காரணத்தால் தினமும் அடிக்கடி விபத்து நடக்கிறது. வேகத்தடை அமைத்து விபத்துகளை தடுக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

கூட்டுத்துாய்மை ஒப்பந்த பணியாளர்கள் மனுவில், 'மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில், ஐந்து ஆண்டுகளாக ஒப்பந்த துாய்மை பணியாளராகவும், ஐந்து ஆண்டுகள் கூட்டு ஒப்பந்த துாய்மை பணியாளர்களாகவும் என, தொடர்ந்து 10 ஆண்டுகள் பணிபுரிந்து வந்தோம். எங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல், கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு துாய்மை பணிகளை செய்து கொடுத்தோம்.

ஆனால், தற்போது பணியில் இருந்து நீக்கி உள்ளார்கள். இதனால், 30 குடும்பங்கள் பாதிக்கப்படுவதுடன், வாழ்வாதாரமும் கேள்விக்குறியாக உள்ளது.

'எனவே, மீண்டும் பணி வழங்குமாறு வேண்டுகிறோம்' என தெரிவித்துள்ளனர்.

துணை மேயர் வெற்றிசெல்வன், துணை கமிஷனர் செல்வசுரபி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement