Load Image
Advertisement

எங்கும் குப்பையால் சீச்சீ... நாறுகிறது குறிச்சி!

 Everywhere you go with garbage... it stinks!    எங்கும் குப்பையால் சீச்சீ... நாறுகிறது குறிச்சி!
ADVERTISEMENT

சாக்கடையில் வீணாகும் குடிநீர்நீலிக்கோணாம்பாளையம், 59வது வார்டு, ஆண்டாளம்மாள் லே-அவுட், பண்ணாரி மாரியம்மன் கோவில் அருகில், குடிநீர் குழாய் உடைந்து, பெருமளவு தண்ணீர் வீணாகிறது. சாலையெங்கும் செல்லும் நீர், வீணாக சாக்கடையில் கலக்கிறது.

- நவீன், சிங்காநல்லுார்.

தண்ணீரின்றி அவதிபேரூர், வேடப்பட்டி டவுன் பஞ்சாயத்தில், புதிய லே - அவுட்டுகள் ஏற்படுத்தப்பட்டு, 500க்கும் மேற்பட்ட வீடுகளும், ஆயிரக்கணக்கானோரும் வசித்து வருகின்றனர். இங்கு, மாதம் ஒருமுறை சிறுவாணி குடிநீரும், 20 நாட்களுக்கு ஒருமுறை அத்திக்கடவு குடிநீரும், வாரம் ஒருமுறை உப்பு தண்ணீரும் விநியோகிக்கப்படுகிறது. போதிய தண்ணீர் கிடைக்காமல், மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

- சங்கர், வேடப்பட்டி.

நடைபாதை ஆக்கிரமிப்புகுனியமுத்துார், இடையர்பாளையத்தில், பல கடைகள் நடைபாதையை ஆக்கிரமித்துள்ளன. கடைகளுக்கு வரும் வாகனங்கள், நடைபாதையில் தாறுமாறாக நிறுத்தப்பட்டுள்ளன. நடைபாதையே தெரியாத அளவுக்கு ஆக்கிரமிப்பு உள்ளது. இதனால், பொதுமக்கள் சாலையில் செல்வதால், போக்குவரத்து நெருக்கடியும், விபத்தும் நடக்கிறது.

- மனோகரன், இடையர்பாளையம்.

மின்விபத்து அபாயம்கணபதி, காந்திமாநகர் 20வது வார்டு, பி.பி.சி., காலனி, ' எஸ்.பி -62, பி -2' என்ற எண் கொண்ட கம்பத்தின் மின் ஒயர்கள், மரக்கிளைகளில் உரசும்படி உள்ளது. மின் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ரங்கசாமி, கணபதி.

சாலையில் மரக்கிளைகள்சுந்தராபுரம், மதுக்கரை ரோடு, அன்னை இந்திரா நகர், மூன்றாவது தெருவில், மின்வாரியத்தால் மின்ஒயர்களில் உரசிய மரக்கிளைகள் வெட்டப்பட்டன. வெட்டப்பட்ட மரக்கிளைகள் முறையாக அகற்றப்படவில்லை. நீண்ட நாட்களாக, போக்குவரத்திற்கு இடையூறாக மரக்கிளைகள் சாலையில் போடப்பட்டுள்ளன.

- முத்துவாப்பா, இந்திரா நகர்.

துரத்தும் நாய்கள்கோணவாய்க்கால்பாளையம், 99வது வார்டில், கூட்டம், கூட்டமாக நாய்கள் சுற்றுகின்றன. சாலையில் நடந்து செல்வோர், பைக்கில் செல்வோரை நாய்களை துரத்துகின்றன. குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுதால், மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- மனோகரன், மகாலிங்கபுரம்.

நிரம்பி வழியும் தொட்டிசாய்பாபாகாலனி அழகேசன் ரோட்டில், பல வாரங்களாக பெருமளவு குப்பை குவிந்து கிடக்கிறது. தொட்டி நிரம்பி சாலையெங்கும் குப்பை சிதறிக்கிடக்கிறது. அப்பகுதி, முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது,

- சங்கர், சாய்பாபாகாலனி.

தெருவிளக்கு பழுதுசிங்காநல்லுார், ஐந்தாவது வார்டு, எழில் நகர், கரட்டு மேட்டில் அமைந்துள்ள, கம்பம் எண் 4ல், கடந்த 20 நாட்களாக விளக்கு எரியவில்லை. இரவு, 7:00 மணிக்கு மேல், வெளியே செல்ல முடியாத நிலையுள்ளது. இருள் காரணமாக, குடியிருப்பு அருகே, சிலர் மது அருந்தும் செயல்களில் ஈடுபடுகின்றனர்.

- சிவகுமார், எழில்நகர்.

அடிக்கடி விபத்துகோவை மாநகராட்சி, மூன்றாவது வார்டு, அஞ்சுகம் நகர், சிந்து நகர் மற்றும் அம்பிகை நகர் செல்லும் வழியில், ரோடு மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளது. சாலையெங்கும் குண்டும், குழியுமாக உள்ளது. பைக்கில் செல்வோர் அடிக்கடி விபத்திற்குள்ளாகின்றனர்.

- ராஜகோபால், உடையாம்பாளையம்.

எங்கும் எதிலும் குப்பைகுறிச்சி, வெங்கடாசலபதி நகர் வடக்கு பகுதியில், குப்பை கிடங்கு போல குப்பை குவிந்து கிடக்கிறது. எங்கு பார்த்தாலும் குப்பைமயமாக இருக்கிறது. சாக்கடை கால்வாயிலும் கிடப்பதால், கழிவுநீர் தேங்கி நிற்கிறது. குடியிருப்பு பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது.

- ரங்கசாமி, குறிச்சி.வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement