ADVERTISEMENT
ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம் அருகே, ஓரிக்கை பகுதியில் உள்ள அரசு மதுபான கிடங்கில் இருந்து, மதுபாட்டில்களை ஏற்றிக் கொண்டு வண்டலுார், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் பகுதியில் உள்ள 'டாஸ்மாக்' கடையில், வினியோகம் செய்ய லாரி ஒன்று நேற்று மாலை புறப்பட்டது.
லாரியை, ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பாஸ்கர், 40, என்பவர் ஓட்டிச் சென்றார். வாலாஜாபாத்- - -வண்டலுார் நெடுஞ்சாலையில் படப்பை அருகே, வஞ்சுவாஞ்சேரி பகுதியை கடந்தபோது ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.
இதில், ஓட்டுனர், அதில் பயணித்த ஊழியர்கள் லேசான காயங்களுடன் தப்பினர்.
லாரியில் இருந்த 25 சதவீத மதுபாட்டில்கள் உடைந்து சேதமாகியது. இந்த விபத்து குறித்து, மணிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!