Load Image
Advertisement

நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பு; இயற்கை ஆர்வலர் எதிர்ப்பு

 Waterway encroachment against naturalists    நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பு; இயற்கை ஆர்வலர் எதிர்ப்பு
ADVERTISEMENT
அவிநாசி:அவிநாசி ஒன்றியம், பழங்கரை ஊராட்சி, தேவம்பாளையம் கிராமத்தில், க.ச.எண் 306/2ல், உள்ள நீர் வழிப் பாதையை, தனியார் தோட்டத்துக்கு செல்ல வசதியாக பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நீர்வழிப்பாதைக்கு மறுபக்கம் உள்ள நிலத்தின் உரிமையாளர்கள் வீட்டுமனை இடமாக மாற்றி விற்பனை செய்வதற்கு வசதியாக வழித்தடம் அமைக்க நீர்வழிப்பாதையை ஆக்கிரமித்து பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு, இயற்கை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து வி.ஏ.ஓ., அண்ணாதுரை கூறுகையில், ''பழங்கரை ஊராட்சி உறுப்பினர்கள் மூலம் தீர்மானம் நிறைவேற்றி கட்டப்பட்டு வருகிறது. பி.டி.ஓ.,வும் அனுமதி அளித்துள்ளார். அதன் அடிப்படையில், பாலம் கட்டும் பணிகள் நடைபெறுகிறது,'' என்றார். பி.டி.ஒ., விஜயகுமாரிடம் கேட்க தொடர்பு கொண்டபோது, அவர் மருத்துவ விடுப்பில் மருத்துவமனையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் நல்லதம்பியிடம் கேட்டபோது, ''தடையில்லா சான்று இல்லாமல் பாலம் கட்டுவது சட்டப்படி குற்றம்.

ஐகோர்ட் தீர்ப்பின்படி, நீர்நிலைகளை ஆக்கிரமிப்பது, நீர் வழித்தடத்தில், கட்டுமானங்கள் கட்டுவது போன்ற செயல்களில், ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, ஊராட்சி நிர்வாகத்திடம் பாலம் கட்டும் பணிகளை நிறுத்துவதற்கு அறிவுறுத்தப்பட்டு, உடனடியாக விளக்கம் கேட்கப்படும்,'' என்றார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement