Load Image
Advertisement

எதிர்க்கட்சிகளின் தவறான கருத்தை முறியடித்த 33 சதவீத இட ஒதுக்கீடு

 33 percent reservation that overcame the misconception of opposition parties    எதிர்க்கட்சிகளின் தவறான கருத்தை முறியடித்த 33 சதவீத இட ஒதுக்கீடு
ADVERTISEMENT
கோவை:''பா.ஜ., அரசு பெண்களுக்கு எதிரானது என்ற எதிர்க்கட்சிகளின் தவறான கருத்துக்களை, மகளிருக்கான, 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா முறியடித்துள்ளது,'' என, பா.ஜ., தேசிய மகளிர் அணி தலைவி வானதி தெரிவித்தார்.

இது குறித்து அவர் நேற்று கூறியதாவது:

பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., அரசு, மகளிருக்கு லோக் சபா மற்றும் சட்டசபைகளில், 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை தாக்கல் செய்துள்ளது.

கண்டிப்பாக இந்த மசோதாவை, மோடி அரசு நிறைவேற்றும் என்ற நம்பிக்கை பெண்களுக்கு உள்ளது.

ஒன்பது ஆண்டுகள் பா.ஜ., ஆட்சியில், பெண்களின் நலனுக்காக பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பல துறைகளில் பெண்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

பல மாநிலங்களில் உள்ளாட்சி அமைப்புகளில், 50 சதவீதம் இட ஒதுக்கீடு அளித்ததின் காரணமாக, பெண்களின் ஆளுமைத்திறன் வளர்ந்துள்ளது.

பெண்களுக்கு எதிரான, சமூக கொடுமைகள் குறைந்துள்ளன. அந்த வகையில் தற்போது லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பெண்களுக்கான இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு, அனைத்து கட்சிகளும் ஆதரவு அளித்து நிறைவேற்ற வேண்டும்.

இதை, வாக்கு வங்கி அரசியல் என, தி.மு.க., விமர்சனம் செய்து வருகிறது.

அப்படி என்றால், 33 சதவீத இட ஒதுக்கீட்டை நிறைவேற்ற வேண்டும் என, தி.மு.க., ஏன் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இதில், யார் வாக்கு வங்கி அரசியல் செய்கின்றனர் என, மக்களுக்கு தெரியும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

வீடியோ இனி தான் வரும்!

வானதி மேலும் கூறுகையில், ''விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு, தி.மு.க., அரசு கடும் நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. ஆனால், முதல்வர் வீட்டில் அவர்கள் குடும்பத்தினர், விநாயகர் சதுர்த்தியை வெகு சிறப்பாக கொண்டாடி இருப்பர். அந்த வீடியோ எல்லாம் இனி வெளி வரும்'' என்றார்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement