Load Image
Advertisement

பா.ஜ., ஆட்சியில் பெண்களுக்கு பல திட்டங்கள்

சென்னை:'பிரதமர் மோடியின் ஒன்பது ஆண்டு ஆட்சியில், பெண்களுக்கு பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு உள்ளன' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவத்துள்ளார்.

அவரது அறிக்கை:

வார்த்தைகளை விட செயலே சத்தமாக பேசுகிறது. பிரதமர் மோடி, லோக் சபாவில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை அறிமுகம் செய்தார். 2017 மஹாசிவாரத்திரியின் போது, பிரதமர் மோடி, 'பெண்களுக்கு அதிகாரம் அளிக்காமல், மனிதகுலத்தின் முன்னேற்றம் முழுமையடையாது' என்று தெரிவித்தார்.

பிரதமர் மோடியின் ஒன்பது ஆண்டு ஆட்சியில் பெண்களால், 26.87 கோடி ஜன்தன் யோஜனா வங்கி கணக்குகள் துவக்கப்பட்டுள்ளன. இதே காலத்தில், 9.60 கோடி இலவச சமையல் காஸ் சிலிண்டர் இணைப்புகள் வழங்கியதால், பெண்கள் சுவாச கோளாறு பிரச்னையில் இருந்து பாதுகாக்கப்பட்டனர்.

பெண்களின் கண்ணியத்தை பாதுகாக்க, 11.72 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டதுடன், 11.88 கோடி குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இலவச வீடு கட்டி கொடுக்கும் திட்டத்தில் கட்டப்பட்ட வீடுகளில், 70 சதவீதம் பெண்களின் முழு உரிமையாக உள்ளது.

மேலும், 3.03 கோடி பெண்களுக்கு மகப்பேறு நலனும், ஊரடங்கின் போது, 20 கோடி பெண்கள் நேரடி பண சலுகையும் பெற்றனர். வங்கிகளில், 27 கோடி பெண்களுக்கு, 'முத்ரா' கடன் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement