ADVERTISEMENT
ஐ.சி.எப்., நியூ ஆவடி சாலை மற்றும் வெள்ளளார் தெரு சந்திப்பில் நேற்று முன்தினம்,போலீசார் கண்காணித்தனர்.
அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்றிந்தவரை பிடித்து விசாரித்ததில், விற்பனைக்காக 1.2 கிலோ கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது.
விசாரணையில், அயப்பாக்கம், ஐ.சி.எப்., காலனியை சேர்ந்த பங்க் பாலு, 34 என்பது தெரிந்தது. இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்து, அவரை போலீசார் கைது செய்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!