ADVERTISEMENT
அயனாவரம், அண்ணா நகர் மண்டலத்திற்குட்பட்ட பகுதியில், அயனாவரம் பிரதான சாலை உள்ளது. இச்சாலை முக்கிய இடங்களை இணைக்கிறது. இந்த சாலையில், சில நாட்களாக கழிவுநீர் ஒடுகிறது.
இதுகுறித்து அப்பகுதியில் வசிப்போர் கூறியதாவது :
பிரதான சாலையில் மழைநீர் வடிகால் பணிகள் நடக்கிறது. அதன் அருகில், சிறிய மழைக்கே குளம் போல் தண்ணீர் தேங்கும். தற்போது இங்கு, மழைநீருடன் கழிவுநீர் தேங்கி கடும் துார்நாற்றம் வீசுகிறது.
ராஜூ தெருவை நோக்கி செல்லும் பாதையில், பழைய வடிகாலில் மழைநீர் தேங்கி உள்ளது. இதை 'மோட்டார்' வாயிலாக சாலையில் விடுகின்றனர்.
ஏற்கனவே சாலையில் தேங்கிய நீரால் சீர்கேடு ஏற்படும் நிலையில், மீண்டும் வடிகால் நீரை விடுவதால், மோசமான நிலை ஏற்பட்டுள்ளது.
அதிகாரிகளிடம் புகார் அளித்தால் தற்காலிகமாக சீரமைக்கப்படுகிறது. இந்த பகுதியில் தேங்கும் மழைநீருக்கும் நிரந்தர தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!