Load Image
Advertisement

கூட்டணி ஒருங்கிணைப்பு கூட்டத்தை நடத்தணும்

அ.தி.மு.க., தலைமையில், 2019ல் தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக உருவானது. தற்போது கூட்டணியில் இரு நண்பர்களிடையே மனக்கசப்பு ஏற்பட்டு, வார்த்தை போர் நடக்கிறது.

இந்த ஆட்சியை அகற்ற, தே.ஜ., கூட்டணியில் இருக்கும் அனைத்து கட்சியினரும் இணைந்து செயல்பட வேண்டிய நேரத்தில், கூட்டணி கட்சிகளின் செயல்பாடு கவலையுடன், வருத்தத்தை அளிக்கிறது.

பிரச்னைகளுக்கு நதி மூலம், ரிஷி மூலம் பார்க்காமல் அனைத்தையும் மறந்து, கூட்டணி கட்சியினர் செயல்பட வேண்டும். விரைவில் தமிழகத்தில் கூட்டணி கட்சிகளின் ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்த, பா.ஜ., தேசிய தலைவர் நட்டாவிடம் கூறியுள்ளேன். இரு நாட்களில் நேரில் சென்று வலியுறுத்த உள்ளேன்.

கடந்த காலம் குறித்து பேசுவதால் பலனில்லை. கூட்டணியில் அனைவரும் கட்டுப்பாட்டுடன் பேச வேண்டும். இது யாருக்கும் அறிவுரை அல்ல; வேண்டுகோள். கூட்டணியினர், தி.மு.க.வுக்கு எதிரான களப்போரை துவக்க வேண்டும், தி.மு.க.,தான் முதல் எதிரி.

- கிருஷ்ணசாமி, நிறுவனர், புதிய தமிழகம்


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement