Load Image
Advertisement

சர்ச்சை ஹோட்டலுக்கு சிக்கன் விற்றவர் கைது

 The man who sold chicken to the dispute hotel was arrested    சர்ச்சை ஹோட்டலுக்கு சிக்கன் விற்றவர் கைது
ADVERTISEMENT
நாமக்கல்:நாமக்கல்லில், 'ஷவர்மா' சாப்பிட்டு பள்ளி மாணவி பலியான விவகாரத்தில், ஹோட்டலுக்கு சிக்கன் வினியோகித்த கறிக்கடை உரிமையாளரை, போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல், சந்தைப்பேட்டை புதுாரைச் சேர்ந்தவர் சுஜாதா, 38. இவரது ஒன்பதாம் வகுப்பு படித்த மகள் கலையரசி, 14, மற்றும் உறவினர்கள், நாமக்கல், 'ஐவின்ஸ்' ஹோட்டலில், கடந்த, 16ம் தேதி ஷவர்மா பார்சல் வாங்கி சாப்பிட்டுள்ளனர்.

சிறிது நேரத்தில் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு, அனைவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், கலையரசி பலியானார். இந்த சம்பவம், தமிழகம் முழுதும் நேற்று முன்தினம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஹோட்டல் உரிமையாளர் நவீன்குமார், 25, சமையலர்கள் இருவர் என மூவரை நாமக்கல் போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், ஹோட்டலுக்கு சிக்கன் வினியோகம் செய்த, நாமக்கல், ராமாபுரம்புதுார், கோனார் கறிக்கடை உரிமையாளர் சீனிவாசன், 45, என்பவரை யும், நாமக்கல் போலீசார் நேற்று கைது செய்தனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement