Load Image
Advertisement

5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் பணி  

திருப்பூர்:'இம்மாதம், 25ம் தேதி வரை ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கப்படும்,' என, மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வைட்டமின் 'ஏ' ஆரோக்கியமான கண் பார்வைக்கு முக்கிய பங்காற்றுகிறது. உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்திக்கும், தோல், திசு மற்றும் எலும்பு வளர்ச்சிக்கும் வைட்டமின் 'ஏ' தேவையானது.

இந்த சத்து குறைபாட்டினால், வறண்ட விழித்திரை, விழிவெண் திரையில் முக்கோண வடிவத்தில் வெண்ணிறமாக தடித்தல் மற்றும் மாலைக்கண் நோய் போன்றவை ஏற்படுகிறது.

இவற்றுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லையெனில், பார்வையே இழக்க நேரிடும் என்பதால், சுகாதாரத்துறை அமைச்சகம் மூலம், தேசிய அளவில், ஆண்டுக்கு இருமுறை வைட்டமின் 'ஏ' திரவம் நாடு முழுவதும், ஆறு மாதம் முதல் ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.

நடப்பாண்டுக்கான சிறப்பு முகாம் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம், மாநகர நகர்நல மையம் அங்கன்வாடி மையங்களில் நேற்று துவக்கி வைக்கப்பட்டது. மாவட்டத்தில் உள்ள ஒன்பது தாலுகா, 13 வட்டாரங்களில் உள்ள மையங்களில் இம்முகாம் துவங்கியது.

சுகாதாரத்துறையினருடன் இணைந்து ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட களப்பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். நேற்றுதுவங்கிய பணி, வரும், 25ம் தேதி வரை நடக்கிறது. இம்முகாம் மூலம் மாவட்டத்தில் உள்ள, 2.38 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கப்பட உள்ளது.

மூடு மந்திரம் ஏன்?

குழந்தைகளின் கண் பார்வை, உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவ, வைட்டமின் 'ஏ' வழங்க சுகாதாரத்துறை அறிவுறுத்துகிறது. திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை இது குறித்து அறிவிப்பை பெற்றோர், மக்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்காமல், மவுனமாக இருந்ததால், நேற்று முகாம் துவங்கி, மருந்து வழங்கிய இடங்கில் ஏன் என்ன மருந்து, எதற்கு கொடுக்கிறீர்கள் என்ற கேள்வியை களத்துக்கு சென்று பணியாளரிடம் தாய்மார்கள் கேட்டனர். வரும் காலத்திலாவது இது போன்ற அறிவிப்புகளை முன்கூட்டியே தெரிவிக்க, மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் முன்வர வேண்டும். கலெக்டர் அலுவலகம் இதனை உறுதிப்படுத்த வேண்டும் என்பது பெற்றோரின் எதிர்பார்ப்பு.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement