ADVERTISEMENT
கோடம்பாக்கம், 'சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மின் இணைப்பு பெட்டி, மின்மாற்றி அருகில் மற்றும் முக்கிய சாலைகளில் குப்பை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும்' என, மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
தேனாம்பேட்டை மண்டலம், 112வது வார்டு கோடம்பாக்கம், பாரதீஸ்வரர் காலனியில், பிரதான சாலை உட்பட ஏராளமான தெருக்களில், 500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
இங்குள்ள, பிரதான சாலையில் உள்ள மின்மாற்றியின் அருகில், குப்பை கொட்டப்பட்டு வருகிறது. இதனால், மின்மாற்றியில் மின்கவுசிவு ஏற்பட்டால் விபத்து ஏற்பட வாய்ப்புஉள்ளது.
இதுகுறித்து, நம் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது.
இதையடுத்து, மின்மாற்றி அருகில் குவிந்து கிடந்த குப்பையை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி துாய்மைப்படுத்தினர்.
மீண்டும் இங்கு குப்பையை கொட்டுவோரை கண்டறிந்து அபராதம் விதிக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!