திருடப்பட்ட பைக் ஏரிக்கரையில் மீட்பு
செம்மஞ்சேரி, செம்மஞ்சேரி, சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் அருண்குமார், 24. இவரது இருசக்கர வாகனம், கடந்த 16ம் தேதி திருடு போனது. செம்மஞ்சேரி போலீசார் விசாரணையில் திருச்சி, துறையூரைச் சேர்ந்த இளவரசன், 24, யாழின்ராஜ், 24, அசோக், 25, ஆகியோர் திருடியது தெரிந்தது.
நேற்று, இவர்கள் மூன்று பேரையும், போலீசார் கைது செய்தனர். இவர்கள், சோழிங்கநல்லுார் ஏரிக்கரையில், புதரில் மறைத்து வைத்திருந்த இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!