Load Image
Advertisement

செம்பும், பித்தளையும் எப்போது தங்கமாகும்?

 When will copper and brass become gold?    செம்பும், பித்தளையும் எப்போது தங்கமாகும்?
ADVERTISEMENT
திருப்பூர்;''செம்பு, பித்தளை போன்ற நாம், மகான்கள் தரிசனம் மூலமும், இறைவன் கூறியுதையும் முழுமையாக கேட்டால், தங்கமாக மாறிவிடுவோம்,'' என, வேளுக்குடி கிருஷ்ணன் பேசினார்.

திருப்பூரில் நேற்று, அவர் பேசியதாவது:

மனிதர்களாகிய நாம் சாதாரண செம்பு, பித்தளை போன்றவர்கள். ஆனால், பகவானின் அனுக்கிரகம் பெற்ற பெரிய மகான்களை சந்தித்தும், அவர்கள் வழங்கும் பகவத் கதைகளை கேட்டும் பகவானை காணலாம். அந்த நேரத்தில் நாமும் தங்கமாக மாறலாம்.

அதற்காகத் தான், புண்ணிய ஸ்தலங்களுக்கு போக வேண்டும். மகான்களை தரிசிக்க வேண்டும். இது போன்ற செயல்களால் நம்மிடமுள்ள பாவம் மெல்ல அழியும். புண்ணியம் சேரும். அப்போது பக்தி பெருகும். முழுமையான இறையுணர்வு நம்மை ஆட்கொள்ளும்.

பாவம் குறையக்குறைய, தர்மம் செய்வோம். அதன் மூலம் பகவானை அடையலாம். மோட்சத்தை அடையலாம். உள்ளத்தில் இருந்த இருள் விலகும். பகவான் உருவம் தெரியும்.

பிரம்மம் எது எனத தெரியாமல் இருந்த குழப்பம் விலகும். மனிதர்கள் பல விதம். நாம் படும் துன்பத்துக்கு நாமே தான் காரணம் என்பவர் ஒரு தரப்பு. எல்லாம் அவன் செயல்; அவன் தான் காரணம் என கடவுள் மீது பழி போடுவது ஒரு தரப்பு. முன்வினை பயன் என்றும், நம் போதாத காலம் என பல காரணங்களை சொல்லுவர். இது தான் கலியுகம். இதில் இறைவன் அருள் இன்றி எப்படி வாழ முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement