மனைவி கண்டித்ததால் போதை கணவர் தற்கொலை
ஆதம்பாக்கம், சென்னை, ஆதம்பாக்கம், நேதாஜி சாலையை சேர்ந்தவர் அருள், 48, கொத்தனார். இவரது மனைவி ஜோதி, 35. நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற அருள் இரவு குடிபோதையில் வீடு திரும்பினார்.
இதனால், கணவரை ஜோதி கண்டித்துள்ளார். இதில், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, படுக்கை அறையில் இருந்து அருள் வெளியேறினார். நீண்ட நேரம் ஆகியும் உள்ளே வராததால் ஜோதி வெளியே வந்து பார்த்தார். அப்போது, ஹால் மின்விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்திருந்தார்.
தகவல் அறிந்த ஆதம்பாக்கம் போலீசார், உடலை மீட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!