Load Image
Advertisement

விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலம் : நாளை நகரில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர்;திருப்பூர் நகரில் நாளை, ஹிந்து முன்னணி சார்பில், விநாயகர் விசர்ஜன ஊர்வலம் நடைபெறவுள்ளது. இதற்காக, மாநகர பகுதியில் போலீசார் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்துள்ளனர்.

இது குறித்த விவரம் வருமாறு:

* அனைத்து கனரக சரக்கு வாகனங்களும் காலை 11:00 முதல் இரவு 10:00 மணி வரை நகருக்குள் வர தடை செய்யப்படுகிறது.

* புதிய பஸ் ஸ்டாண்ட் செல்லும் பஸ்கள் அனைத்தும் மாலை, 4:00 முதல் இரவு 8:00 மணி வரை பழைய ஆர்.டி.ஓ., சந்திப்பு மற்றும் 60 அடி ரோட்டில் பயணிகளை ஏற்றி இறக்கி செல்ல வேண்டும். 60 அடி ரோடு தற்காலிக பஸ் ஸ்டாண்டாட செயல்படும்.

* பெருமாநல்லுாரிலிருந்து புதிய ஸ்டாண்ட் வரும் பஸ்கள், அனைத்தும் மாலை, 4:00 முதல் இரவு 8:00 மணி வரை போயம்பாளையத்தில் பயணிகளை ஏற்றி இறக்கி செல்ல வேண்டும். போயம்பாளையம் தற்காலிக பஸ் ஸ்டாண்டாக செயல்படும்.

* பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்து, பெருமாநல்லுார் செல்லும் வாகனங்கள், மாலை 4:00 முதல் இரவு 8:00 மணி வரை அவிநாசி ரோடு வழியாக திருமுருகன்பூண்டியிலிருந்து பூலுவப்பட்டி நால்ரோடு வழியாக செல்ல வேண்டும்.

* பெருமாநல்லுாரிலிருந்து பழைய பஸ் ஸ்டாண்ட் வரும் பஸ்கள் மாலை 4:00 முதல் இரவு 8:00 மணி வரை பூலுவப்பட்டி, நெருப்பெரிச்சல், ஊத்துக்குளி நால்ரோடு வழியாக பழைய பஸ்ஸ்டாண்ட் செல்ல வேண்டும்.

* அவிநாசியிலிருந்து, திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் செல்லும் பஸ்கள், மாலை, 4:00 முதல் இரவு 8:00 மணி வரை திருமுருகன்பூண்டி, பூலுவப்பட்டி, நெருப்பெரிச்சல், ஊத்துக்குளி நால்ரோடு, வழியாக பழைய பஸ் ஸ்டாண்ட் செல்ல வேண்டும்.

* பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்து, அவிநாசி மற்றும் புதிய பஸ் ஸ்டாண்ட் செல்லும் பஸ்கள், 4:00 முதல் இரவு 8:00 மணி வரை, ராஜிவ் நகர் சிக்னல், செல்லாண்டியம்மன் துறை, மின்மயானம், ஊத்துக்குளி ரோடு, தலைமை தபால் நிலையம், புஷ்பா சந்திப்பு, அவிநாசி ரோடு வழியாக செல்ல வேண்டும்.

* காங்கயம் ரோடு, நல்லுாரிலிருந்து திருப்பூர் நோக்கி வரும் வாகனங்கள் முத்தணம்பாளையம் நால்ரோடு, கோவில்வழி, பல்லடம் ரோடு வீரபாண்டி பிரிவு வழியாக மாலை 4:00 முதல் இரவு 8:00 மணி வரை மாற்றுப் பாதையில் திருப்பி விடப்படும்.

* பல்லடம் சாலையிலிருந்து தாராபுரம் செல்லும் வாகனங்கள் அனைத்தும் வீரபாண்டி பிரிவு, காளிகுமாரசாமி கோவில், பிள்ளையார் நகர், கோவில் வழி வழியாக மாலை 4:00 முதல் இரவு 8:00 மணி வரை மாற்றுப் பாதையில் திருப்பி விடப்படும்.

* பல்லடம் ரோட்டிலிருந்து அவிநாசி மார்க்கமாக செல்லும் வாகனங்கள் மாலை 4:00 முதல் இரவு 8:00 மணி வரை, வீரபாண்டி பிரிவு, பலவஞ்சிபாளையம், கோவில்வழி, காங்கயம் ரோடு, நல்லூர், காசிபாளையம் சோதனை சாவடி, கூலிபாளையம் நால்ரோடு, பூண்டி ரிங் ரோடு வழியாக அவிநாசி செல்ல வேண்டும்.

* மங்கலம் ரோட்டிலிருந்து பல்லடம் ரோடு, தாராபுரம் ரோடு செல்லும் வாகனங்கள் அனைத்தும் 4:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, பெரியாண்டிபாளையம், முருகம்பாளையம், வித்யாலயம், வீரபாண்டி பிரிவு வழியாக மாற்றுப் பாதையில் திருப்பி விடப்படும்.

* மங்கலம் ரோட்டிலிருந்து அவிநாசி மார்க்கமாக செல்லும் வாகனங்கள் 4:00 மணி முதல் இரவு 08:00 மணி வரை அணைப்பாளையம் பிரிவு, அணைப்பாளையம், சலவைப்பட்டறை, சிறுபூலுவபட்டி வழியாக அவிநாசி செல்ல வேண்டும்.

* தாராபுரம் ரோட்டிலிருந்து அவிநாசி மார்க்கமாக செல்லும் வாகனங்கள் மாலை, 4:00 முதல் இரவு 8:00 மணி வரை கோவில்வழி, காங்கேயம் ரோடு வழியாக, நல்லூர், காசிபாளையம் சோதனை சாவடி, கூலிபாளையம் நால்ரோடு, பூண்டி ரிங் ரோடு வழியாக அவிநாசி செல்லலாம்.

இவ்வாறு போலீசார் தெரிவித்துள்ளனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement