Load Image
Advertisement

விநாயகர் சதுர்த்தி விளையாட்டு போட்டி

 Ganesha Chaturthi Sports Competition     விநாயகர் சதுர்த்தி விளையாட்டு போட்டி
ADVERTISEMENT
பல்லடம்;விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பல்லடம் நகராட்சி, பெரியார் நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்துள்ளனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பொதுமக்கள் சார்பில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டன.

முன்னதாக, விநாயகருக்கு பொங்கல் வைத்து வழிபாடு நடந்த பின், விளையாட்டுப் போட்டிகள் துவங்கின. பலுான் வெடித்தல், லெமன் ஸ்பூன், பாட்டிலில் தண்ணீர் நிரப்புதல், சாக்கு பையுடன் ஓட்டம், சைக்கிள் பந்தயம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. சிறுவர், சிறுமியர், குழந்தைகள் உள்ளிட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகளும், பங்கேற்றவர்களுக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement