மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி
பல்லாவரம், பல்லாவரத்தை அடுத்த திரிசூலம், லட்சுமணன் நகரைச் சேர்ந்தவர் கார்த்திக், 23. ஜமீன் பல்லாவரத்தில், முத்துபாண்டி என்பவரின் மெக்கானிக் கடையில் பணிபுரிந்து வந்தார்.
நேற்று மதியம், பழுது நீக்க வந்த இருசக்கர வாகனத்தை சுத்தம் செய்ய, 'மோட்டார் சுவிட்சை' இயக்கினார்.
அப்போது, எதிர்பாராதவிதமாக, அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் மயங்கிய கார்த்திக்கை, அங்கிருந்தோர் மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றனர்.
அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், கார்த்திக் இறந்தது தெரிந்தது. பல்லாவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!