ADVERTISEMENT
திருப்பூர்:'சளி, காய்ச்சலுடன் அனுமதியாகிறவர் உடல்நிலை குறித்து, தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். உடலின் நிலை குறித்து புரிந்து கொள்ளும் வகையில், நோயாளிக்கு எடுத்துரைக்க வேண்டும்,' என, செவிலியர், மாணவியருக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், டெங்கு காய்ச்சலுடன் வருவோருக்கு எத்தகைய சிகிச்சை அளிக்க வேண்டும், எவ்வாறு கண்காணிக்க வேண்டும், தொடர் சிகிச்சை அளிப்பது எப்படி என்பது குறித்து செவிலியர்கள், நர்ஸிங் கல்லுாரி மாணவியருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
மருத்துவ கல்லுாரி டீன் முருகேசன் தலைமை வகித்தார். பொது மருத்துவத்துறைத்தலைவர் செண்பகஸ்ரீ, டாக்டர்கள் பிரகாஷ், கவிப்பிரியா, நவீன்பாபு ஆகியோர் டெங்கு அறிகுறி, தடுப்பு முறைகள், காய்ச்சலில் இருந்து மீள்வது, உடலை ஆரோக்கியமாக பேணிகாப்பது உள்ளிட்டவை குறித்து எடுத்துரைத்தனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!