ADVERTISEMENT
செம்மஞ்சேரி, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் கட்டுப்பாட்டில், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் பகுதியில், 27,000 வீடுகள் உள்ளன. நெம்மேலி கடல்நீர் குடிநீராக்கும் திட்டத்தில் இருந்து, இங்கு குடிநீர் வழங்கப்படுகிறது.
எம்.ஆர்., என்ற ஒப்பந்த நிறுவனம் பராமரிப்பில் உள்ள பிளாக்குகளில், குடிநீர் முறையாக வினியோகிப்பதில்லை எனக் கூறி, நேற்று, அங்குள்ள பெண்கள் காலி குடத்துடன் நுாக்கம்பாளையம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
செம்மஞ்சேரி போலீசார், வாரிய அதிகாரிகள் பேச்சுக்கு பின், அனைவரும் கலைந்து சென்றனர்.
பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், 'மோட்டார் பழுது எனக் கூறி, பல நாட்கள் முறையாக குடிநீர் வினியோகிப்பதில்லை. வாரிய அதிகாரிகள், ஒப்பந்ததாரரிடம் கூறியும் பயனில்லாததால், சாலை மறியல் செய்தோம்' என்றனர்.
வாரிய அதிகாரிகள் கூறியதாவது:
பிளாக்கில் உள்ள சிலர், மோட்டாரை முறையாக இயக்காமல் பழுதடைய செய்ததால், குடிநீர் வினியோகம் தடைபட்டது. மாற்று ஏற்பாட்டில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. ஒப்பந்த நிறுவனங்களிடம், பணி தெரிந்த ஊழியர்களை நியமிக்க வலியுறுத்தி உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!