போராட்ட ஆசிரியர்கள் மீதான வழக்குகளை கைவிட முடிவு
சென்னை:ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சங்கங்களின் சார்பில், 2019ல், பல்வேறு கோரிக்கைகளுக்காக, ஒரு வாரத்துக்கும் மேலாக, தொடர் வேலைநிறுத்த போராட்டம் நடந்தது.
இதில் ஈடுபட்டவர்கள் மீது, அரசு பணியாளர் நடத்தை விதி மீறல் அடிப்படையில், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது, போலீஸ் வழியே குற்ற வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.
இதையடுத்து, தி.மு.க., ஆட்சி வந்ததும், போராட்டத்தால் மேற்கொள்ளப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட்டன. அத்துடன், போலீஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகளையும் கைவிட திட்டமிடப்பட்டு உள்ளது.
இதற்காக, வழக்குகளில் சிக்கிய ஆசிரியர்களின் விபரங்களை திரட்ட, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!