ஆண் யானை மர்ம மரணம் வனத்துறையினர் விசாரணை
உடுமலை:ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் மாவட்டம், உடுமலை வனச்சரகம், ஈசல் திட்டு பகுதியில், ஆண் யானை இறந்து கிடந்தது. கால்நடை மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திலேயே, யானை உடலை பிரேத பரிசோதனை செய்தனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'இறந்த ஆண் யானைக்கு, 20 - 25 வயது இருக்கலாம். முதற்கட்ட பரிசோதனையில், இயற்கையான முறையில் இறந்துள்ளது தெரிய வருகிறது. இளம் வயது யானையாக இருந்ததால், யானையின் தந்தங்கள் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது' என்றனர்.
உடுமலை வனச்சரகத்தில், ஆறு மாதத்தில், மூன்று ஆண் யானைகள் இறந்துள்ளன. இதே வனச்சரகம், மாவடப்பு என்ற பகுதியில் வேட்டை கும்பலால் யானை கொல்லப்பட்ட நிலையில், குற்றவாளிகள் இதுவரை கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!