ADVERTISEMENT
புழுதிவாக்கம், நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, வீராங்கல் ஓடை துார்வாரும் பணிக்கு இடையூறாக இருந்த, சிமென்ட் சட்டங்கள் அகற்றப்பட்டன.
சென்னை மாநகராட்சி, 186வது வார்டு, பெருங்குடி மண்டலம் புழுதிவாக்கம் வார்டுக்கு உட்பட்ட பகுதியில், மழைநீர் வடிகால் பணிகள் துரிதமாக நடக்கின்றன.
வடிகால் வழியாக வந்தடையும் நீர், வீராங்கல் ஓடையில் கலந்து, அங்கிருந்து பள்ளிக்கரணை சதுப்பு நிலம் வழியாக, ஒக்கியம்மேடு சென்று, பின்னர் கடலில் கலக்கும்.
இந்நிலையில், நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, வீராங்கல் ஓடை துார்வாரும் பணிகள், 10 நாளைக்கு முன் துவங்கிய நிலையில், புழுதிவாக்கம் பாலாஜி நகர் விரிவு, 18வது தெரு சாலையில் குவித்து வைக்கப்பட்டிருந்த 'கான்கிரீட்' சட்டங்கள், வீராங்கல் ஓடைக்கு நெருக்கமாக உள்ளதால், ஓடை துார்வாரும் பணி 150 அடி நீளத்திற்கு தடைபட்டிருந்தது.
தவிர, ஓடையின் கரை ஓரத்தில் முளைத்துள்ள செடி, கொடி, மரம் உள்ளிட்டவற்றை அகற்றவும், சகதி உள்ளிட்ட கழிவுகளை அப்புறப்படுத்தவும், இந்த கான்கிரீட் சட்டங்கள் இடையூறாக இருந்ததை சுட்டிக்காட்டி, நம் நாளிதழில் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக, ஓடை துார்வாரும் பணிக்கு இடையூறாக இருந்த சிமென்ட் சட்டங்கள் முற்றிலுமாக அகற்றப்பட்டன. இதனால், சாலையின் அகலம் அதிகமாகி, போக்குவரத்தும் எளிதானது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!